அவசரத்தில் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஊழியர்கள்..!
ஆம்புலன்ஸில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் நாச்சியாபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சரவணா, துர்கா தம்பதி. துர்கா கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நிறைமாத கர்ப்பிணியான துர்காவை ஆம்புலன்சில் ஏற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் துர்காவிற்கு பிரசவ வலி அதிகமானதால் அவசரம் கருதி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்தனர்.
இதில் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. முதலுதவி சிகிச்சைக்குப் பின் துர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.





