--- --:--:-- --

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்..வயிற்றில் குழந்தை இறந்த பரிதாபம்..!

10

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி நித்யா.

 

7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்பொழுது மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் மறுநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

மருத்துவ ஊழியர்கள் சரிவர சிகிச்சை அளிக்காததால் குழந்தையை வயிற்றில் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon