பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் வயிற்றில் கரு..!
பீகாரில் பிறந்து 40 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையின் வயிற்றில் கரு வளர்ந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. பீகாரில் ரஹ்மானியா என்ற தனியார் மருத்துவமனையில் பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை ஒன்று கொண்டுசெல்லப்பட்டது. அதன் வயிற்றில் வீக்கம் காணப்படுகிறது என அதன் பெற்றோர் மருத்துவரிடம் கூறியுள்ளனர்.
இதனால் அந்த குழந்தை முறையாக சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து அறிய குழந்தையை மருத்துவர் பரிசோதனை செய்துள்ளார். இதற்காக சிடி ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் முற்றிலுமான அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் வயிற்றில் கரு வளர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளனர். இதுபற்றி பேசி உள்ள மருத்துவ ஆராய்ச்சியில் இது ஒரு அரிய வகையிலான இயற்கையில் நடக்கக்கூடிய நிகழ்வு என தெரிவித்துள்ளார். 5 லட்சம் பேரில் ஒருவருக்கு இதுபோன்று ஏற்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு பின்னர் குழந்தையின் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையிலிருந்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





