நேபாள விமான விபத்தில் 22 பேரும் உயிரிழந்ததாக தகவல்..!
நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 இந்தியர்கள் உட்பட அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாள நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் 22 பேருடன் புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே தொடர்பை இழந்தது.
ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. போபம் என்ற இடத்தில் விமானம் விபத்திற்குள்ளானது கண்டறியப்பட்டது. அதில் பயணித்த அனைவரும் இறந்ததாக சொல்லப்படும் நிலையில் இதுவரை 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில் அந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள், இரண்டு ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 ஊழியர்கள் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அதில் 1,500 அடி உயரத்தில் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.
நேபாளத்துக்கு சுற்றுலா செல்ல வந்துள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த 4 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்ததும் கண்டறியப்பட்டு இருப்பதால் அவர்களது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





