நிகழ்ச்சிக்கு வால்கிங் ஸ்டிக் உடன் வந்த தொகுப்பாளினி டிடி..!
தொகுப்பாளினிகள் என்று தமிழ் சினிமாவில் கூறினாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது டிடி தான். கடந்த 20 வருடத்திற்கும் மேலாக இந்த துறையில் முன்னணியில் இருக்கிறார்.
அதுவே பெரிய சாதனை என்று தான் கூற வேண்டும். நிகழ்ச்சிகள் புதிதாக வந்தாலும் அவரை தான் முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகுவாகர்கள், காரணம் அந்த அளவிற்கு அவரது கொண்டு செல்லும் நிகழ்ச்சி சூப்பராக இருக்கும்.
மிகவும் கலகலப்பாக பிரபலங்களை பேசிய ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை செய்ய வைத்து விடுவார். அண்மையில் விஜய்யில் ஒளிபரப்பான விக்ரம் ஸ்பெஷல் ஷோ, விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி இருந்தார். அண்மையில் The Legend Movie ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு வரும் போது டிடி தனது கையில் Walking Stickவுடன் நடந்து வர ரசிகர்கள் ஷாக் ஆகினார்கள். ஆனால் அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு Walking Stickவுடன் வந்த தொகுப்பாளினி டிடி- ஷாக்கான ரசிகர்கள், புகைப்படம் இதோ
📱 Share on WhatsApp 𝕏 Share on X




