--- --:--:-- --

பன்றியின் இதயம் பொருத்தியவர் உயிரிழப்பு..!

4

ன்றியின் இதயம் பொருத்தப்பட்டு உயிரிழந்த டேவிட்டின் இதயப் பரிசோதனை செய்ததில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 50 வயதான டேவிட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலாண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கு கடந்த ஜனவரி மாதம் பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் பொருத்தியிருக்கிறார்கள்.

 

மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்பட்டது. பின்னர் பயன்படுத்திய இரண்டு மாதங்களில் டேவிட் காலமானார். இதனை ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்ததில் அவருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயத்திற்குள் ஒரு வைரஸ் தொற்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு உறுப்புகளை பொருத்துவதால் புதிய தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon