--- --:--:-- --

7வது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு..!

1

சென்னையில் ஏழாவது மாடியில் இருந்து இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபொழுது குழந்தை தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த வினிதா என்பவரது கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் இரண்டரை வயது பெண் குழந்தையுடன் சென்னை ஓட்டேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

 

7வது மாடியில் உள்ள அவர்களது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருந்த ஜன்னலை திறந்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது குழந்தை கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

 

குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்கள் விசாரணை நடத்துகின்றனர்.

Right Menu Icon