4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை ..!
சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.
அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி திருத்த சட்ட முன்வடிவு அறிமுகமாகிறது. குமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.





