கழிவு நீரை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட பரிதாபம்..!
மதுரை நேரு நகரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். மதுரை மாநகராட்சியில் சிவக்குமார், சரவணன், லக்ஷ்மணன் ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் மதுரை நேதாஜி நகரில் கழிவு நீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க வந்துள்ளனர். அப்போது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிவக்குமார் என்பவரை காப்பாற்ற சென்ற லக்ஷ்மணன், சரவணன் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.





