தலையின் விக்கிற்குள் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம்..!
அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரின் தலையில் வைத்திருந்த விக்கிற்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
பசை வடிவில் தங்கத்தை மாற்றி விக் அடியில் ஒட்டி வைத்துக் கொண்டு வந்த நபரிடம் இருந்து 130 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபரை கைது செய்து விசாரித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





