--- --:--:-- --

கர்நாடகா அமைச்சர் ராஜினாமா..!

6

ப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா முதல் அமைச்சரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தான் நிரபராதி என நிரூபித்த பிறகு மீண்டும் அமைச்சராவேன் என ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

 

கர்நாடக மாநிலம் பெலகாம் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான சந்தோஷ் என்பவர் ஒப்பந்த பணிகளில் அமைச்சர் ஈஸ்வரப்பா 40 விழுக்காடு கமிஷன் கேட்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து தனது இறப்புக்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்டார்.

 

இதையடுத்து அமைச்சர் ஈஸ்வரப்பாவை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon