அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்..!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீராமநவமி ஆன நேற்று அசைவ உணவு வழங்க கூடாது என பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி போராட்டம் நடத்தியது.
இதற்கு இடதுசாரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் இடதுசாரி மாணவர்களும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இருதரப்பினரும் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டதால் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவ-மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.






