படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு..!
ராமேஸ்வரத்தில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒற்றை தாளை கடற்கரை பகுதியை சேர்ந்த முனிய ராஜ் என்பவர் நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தவரை இந்திய கடற்படையினர் மீனவர்கள் தொடர்ந்து தேடிவந்தனர். இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





