16 அடி நீள ராஜநாகம்..! பீதியில் உறைந்த பணியாளர்கள்..!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே மரத்தில் இருந்து 16 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்தனர். உருளிக்கள் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட பணியாளர்கள் ஏராளமானோர் நாள்தோறும் பணிக்கு சென்று வருகின்றனர்.
அங்கு உள்ள தொழிற்சாலை வளாகத்தில் மரமொன்றில் ராஜநாகம் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் மரத்திலிருந்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்து அதை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





