ஏலியன் பட்டாம்பூச்சியா..? வைரலாகும் வீடியோ..!
புதுச்சேரி அருகே ஏலியனைப் போல விசித்திர முகம் கொண்ட பட்டாம்பூச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டாம்பூச்சியை பார்க்க விசித்திரமாகவும் தோட்டா போன்ற முக தோற்றத்துடனும் காணப்படுகிறது.
இதன் இறக்கைகள் வேற்று கிரகவாசியான ஏலியன் போல இருப்பதால் இந்த பட்டாம்பூச்சியின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பட்டாம்பூச்சி எந்த ரகத்தை சேர்ந்தது என்றும் அதற்கு விஷத்தன்மை உள்ளதா என்பது குறித்தும் புதுச்சேரி வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.





