பெரியார் பல்கலை. மாணவிக்கு பாலியல் தொல்லை..!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி ஒருவர் சூலமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் பிரேம் குமார் என்பவர் கடந்த ஓராண்டு காலமாக இரட்டை அர்த்தத்தில் பேசி சாதி பெயரை சொல்லி திட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். போலீஸ் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார்வழக்கு பதிவு செய்ததில் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ளவரை தேடி வருகின்றனர்.





