--- --:--:-- --

திடிரென விமானம் தரையிறங்க உதவும் கியர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்ததால் பரபரப்பு..!

2

கொலம்பியாவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதையடுத்து இருபத்தி ஓர் ஆயிரம் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். கொலம்பியாவின் ரியோநீக்ரோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து லேட்டம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ரக விமானம் புறப்பட்டது.

 

அப்பொழுது விமானம் தரையிறங்க உதவும் கியர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்ததால் விமானம் உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே அவசரமாக திரும்பியுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு விமான போக்குவரத்து துறை இயக்குனர் பஜார்டோ குறிப்பிட்டார்.

 

மேலும் இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக அந்த விமான நிலையத்தில் செல்லும் மற்றும் வருகிற விமானங்கள் 12 மணி நேரத்திற்கு மேல் ரத்து செய்யப்பட்டதால் மற்ற விமான நிலையங்களில் இருந்து காலதாமதமாக கிளம்பியது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon