--- --:--:-- --

வில் ஸ்மித்தை வெளியேறக் கூறிய ஆஸ்கர் அகாடமி..!

3

ஸ்கர் விருது விழா மேடையில் நடிகர் கிரிஸ் ராக்கை, வில்ஸ்மித் கன்னத்தில் அறைந்தது குறித்து உரிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த திங்கள்கிழமை நடந்தது.

 

இந்த விழாவில் நகைச்சுவை நடிகர் கிஸ்ரா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். விழாவின் பொழுது அங்கிருந்த நடிகர் வில் ஸ்மித் இன் மனைவி குறித்து கேலியாக பேசினார். உடனடியாக மேடைக்கு வந்த வில்ஸ்மித் அவரின் கன்னத்தில் அறைந்து உன் வாயால் என் மனைவியின் பெயரை சொல்லாதே என சத்தமாக கூறியுள்ளார்.

 

இது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு மறுநாளே வில்ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணையை தொடங்கி இருப்பதாக ஆஸ்கர் அகாடமி அமைப்பு தெரிவித்துள்ளது.

 

அறைந்த பின் வில்ஸ்மித் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டது எனவும் ஆனால் அங்கிருந்து வெளியேற அவர் மறுத்து விட்டதாகவும் அகாடமி அறிவித்துள்ளது. விதிகளை மீறியதால் நடவடிக்கை மேற் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon