திருமண கோலத்தில் பிக் பாஸ் கேபிரியலா..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரியலா. இதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் கதாநாயகி ஸ்ருதி ஹாசனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் இதில் கிடைக்காத பிரபலம், கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 4 இருவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கேபிரியலா தொடர்ந்து பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது சீரியலுகாக போட்டுகொண்டு திருமண கோலத்தில் சில போட்டோக்கள் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.






