--- --:--:-- --

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா எதிர்ப்பு..!

7

உக்ரைன்- ரஷியா போரால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

 

மேலும், ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நிறுத்த இருப்பதாக பிரிட்டனும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது கச்சா எண்ணெய் விலையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

 

ரஷியாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்து வருவதால், நெருக்கடியை சமாளிக்க மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷியா முன் வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon