--- --:--:-- --

நேட்டோவில் உக்ரைன் இணையாது…மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறிய ஜெலன்ஸ்கி..!

6

நேட்டோவில் உக்ரைன் இணையப் போவதில்லை என்பதை உக்ரைன் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைய உக்ரைன் அதிபர் முயற்சி மேற்கொண்டதால் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

 

தொடர்ந்து 21-வது நாளாக இரு நாடுகளிடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் உக்ரைன் இணைய வலியுறுத்த போவதில்லை என தெரிவித்தார்.

 

இதனை தொடர்ந்து நேற்று பேசிய ஜெலன்ஸ்கி நேட்டோவில் உக்ரைன் இணைய போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அந்நாட்டு மக்களுக்கு ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாக ரஷ்ய அரசு சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon