ஆறு நாட்களுக்கு மேலாக பற்றி எரியும் காட்டுத் தீ..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் தொடர்ந்து 6 நாட்களுக்கு மேலாக பற்றி எரியும் காட்டுத் தீயால் வன விலங்குகள், பறவைகள், அரிய வகை தாவரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கலாம் என பல ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொண்டாடுவதே கொடைக்கானலில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்கு சில இடங்களில் தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதி, பாதுகாக்கப்பட்ட காப்புக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இதனால் வனவிலங்குகள், பறவைகள், அரிய வகை தாவரங்கள் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






