--- --:--:-- --

சினேகாவுடன் இருந்த அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ..!

3

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினேகாவுடன் நடித்த அனுபவத்தை உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளிலும் நடிக்கிறார்.

 

தெலுங்கு படவாய்ப்புகளும் குவிகின்றன. தற்போது தமிழில் ஐந்து படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். மலையாள படங்களிலும் நடிக்கிறார். அத்துடன் விளம்பர படங்களிலும் வருகிறார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதிவில் நான் சிறுமியாக இருந்தபோது ஹைதராபாத்தில் ஒரு ஓரத்தில் நின்று முதன்முறையாக படப்பிடிப்பை பார்த்தேன்.

 

அந்த படத்தில் சினேகாவை தான் பார்த்தேன். இப்பொழுது சினேகா உடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது எனவும் இது அருமையான தருணம் எனவும் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon