--- --:--:-- --

இந்தோனேஷியாவில் 3 இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

4

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தீவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தோனேஷியாவில் நிலச்சரிவு காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

இதேபோல் பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட தலைநகரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக நாட்டின் நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon