சமந்தாவை பாராட்டிய நயன்தாரா ..!
காத்துவாக்குல 2 காதல் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை சமந்தாவை பார்த்து நீங்க ரொம்ப நல்லா நடித்திருக்கிறீர்கள் என்று நயன்தாரா சமந்தாவை புகழ்ந்துள்ளார். நயன்தாராவும், சமந்தாவும் காத்துவாக்கில 2 காதல் என்ற படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தை விக்னேஷசிவன் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் சென்னையில் தான் நடக்கிறது. கேரளாவை சேர்ந்த நயன்தாராவும், சென்னையை சேர்ந்த சமந்தாவும் இந்த படத்தில் நடிக்கும் நடிப்பதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது கூட இல்லையாம்.
காத்துவாக்கில 2 காதல் படத்தின் ஷூட்டிங்கில் தான் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். ஷூட்டிங்கில் சமந்தா தொடர்பான காட்சிகளை நயன்தாரா கண் சிமிட்டாமல் பார்த்து ரசித்தாராம். அந்த சீன் முடிந்த பிறகு கேரவன் வந்த சமந்தாவை நயன்தாரா கட்டிப்பிடித்து கைகுலுக்கி கிரேட் ரொம்ப நல்லா நடிக்கிறீங்க என மனம் திறந்து பாராட்டினாராம்.






