ஐஸ் கட்டி தொட்டியில் 3மணி நேரம் தொடர்ந்து நின்ற போலந்து நாட்டவர்..!
போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் ஐஸ்கட்டிகள் நிரப்பப்பட்ட கண்ணாடித் தொட்டியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
லித்வேனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோமனோஸ்கி என்பவர் உடல் முழுவதும் ஐஸ்கட்டிகள் சூழ சுமார் 3 மணி நேரம் 27 நிமிடங்கள் நின்று சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு பிரான்சை சேர்ந்த நபர் சுமார் 2 மணி 45 நிமிடங்களில் இதனை செய்திருந்தார். தற்பொழுது சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளதாக கின்னஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.






