கைக்குழந்தையுடன் நியூஸ் வாசித்த பெண்..! வீடியோ வைரல்..!
அமெரிக்காவில் வீட்டில் இருந்து பணிபுரியும் பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் தொலைக்காட்சி நேரலையில் தோன்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் நகரை சேர்ந்தவர் டெபாகிசு. வானிலை ஆராய்ச்சியாளரான இவர் சிபிஎஸ் 58 என்ற தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வானிலை அறிக்கை வாசிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென தனது 3 மாத குழந்தை அழுவதைக் கண்டார். குழந்தையை தூக்கிக்கொண்டு செய்தியை வாசித்தார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.






