--- --:--:-- --

அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்..!

7

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசு தலைவர் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் லதா மங்கேஷ்கரின் இனிமையான குரல் மக்களை வியக்க வைக்கும்.

 

ஈடு இணையற்ற பெருமை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கரின் பாடல்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எனவும், சாதனைகளை ஒப்பிட முடியாது எனவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

 

லதா மங்கேஷ்கர் மறைவு செய்தியைக் கேட்டு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு கடும் வேதனை அடைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவருடனான உரையாடல்கள் என்றும் மறக்க இயலாதவை நிரப்ப முடியாத வெற்றிடத்தை லதா மங்கேஷ்கர் விட்டு சென்றுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

 

அவரின் குரல் ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்துள்ள ராகுல் காந்தி லதா மங்கேஷ்கர் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon