துணை நடிகை ஜோதி ரெட்டி விபத்தில் மரணம்..!
சினிமாவில் துணை நடிகையாக பணிபுரிந்து வந்த நடிகை ஜோதி ரெட்டி ரயில் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவை சொந்த ஊராகக் கொண்டவர் ஜோதி ரெட்டி. தெலுங்கு சினிமாவில் துணை நடிகராக பணிபுரிந்து வந்த இவர் ஐதராபாத்தில் வசித்து சினிமா வாய்ப்புகளை தேடி வந்தார்.
இவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த படத்தில் துணை நடிகையாக நடித்து கடந்த 17ஆம் தேதி இரவு கடப்பாவில் இருந்து ஹைதராபாத்துக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். விடியற்காலை 5.30 மணி அளவில் இருப்பதை உணர்ந்தார்.
இரயில் நிலையம் வந்துவிட்டது என உறக்க கலக்கத்திலேயே ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.தவறான ரயில் நிலையம் என்பதை உணர்ந்தவர் மீண்டும் ரயிலில் ஏற முயற்சித்தபோது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






