குடிபோதையில் சாலையின் நடுவே பைக்கை கவிழ்த்து அமர்ந்த நபர்..!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டப்பகலில் குடிபோதையில் நபர் ஒருவர் சாலையில் இருசக்கர வாகனத்தை கவிழ்த்துப் போட்டு அதன்மேல் அமர்ந்து கொண்டு போன் பேசி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய காட்சிகள் அந்த பகுதியில் வைரலாகி வருகிறது.
மது போதையில் சாலையில் வண்டியை கவிழ்த்து போட்டு அமர்ந்து வீடு போல சாவகாசமாக அமர்ந்து போன் பேசிய அந்த நபரால் கார் போன்ற மிகப்பெரிய வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டது. பொறுத்து பார்த்த வாகன ஓட்டிகள் போதை ஆசாமியை படாதபாடு படுத்தி பைக்கை சாலையோரமாக வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





