--- --:--:-- --

“அண்ணாமலையாருக்கு அரோகரா” அரோகரா” என்று பக்தர்கள் முழக்க திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது

sryrey

இன்று கார்த்திகை மாதம் பவுர்ணமி நாள். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவ பெருமானின் பஞ்சபூத தளங்களில் அக்னித் தளமாக விளங்குவது திருவண்ணாமலை.

 

ஆண்டு தோறும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது. கோவிலில் நவம்பர் 10-ம் தேதி, தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

 

10-வது நாளான இன்று அதிகாலை பரணி தீபம், அண்ணாமலையார் தீபம்,விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்பட்டது.

மஹா தீபம்

 

இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாருக்கு அரோகரா” என்று பக்தர்கள் முழக்க மஹா தீபம் ஏற்றப்பட்டது. தீபத்திருவிழாவில் கோவிட் விதிகளைப் பின்பற்றி பக்தர்கள் அனைவரும் கிரிவல பாதையில் நின்று தரிசனம் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon