--- --:--:-- --

தடுப்பூசி போடாதவர்களே அதிக மரணம் அடைகிறார்கள்..!

5

கொரொனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு மூன்றரை மடங்கு ஆபத்து அதிகம் உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் கொரொனா தொற்றால் 2011 பேர் மரணமடைந்துள்ளனர்.

 

அதில் 1675 பேர், அதாவது 84 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு மூன்றரை மடங்கு உயிரிழப்பு அதிகம் உள்ளது.

 

இதனால் பொதுமக்கள் அபாயத்தை உணர்ந்து விரைவில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைவருக்கும் போடுவதற்கான தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon