--- --:--:-- --

லக்கிம்பூர் வழக்கு தொடர்பாக இன்று விசாரணை.!

4

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லக்கிம்பூர் வன்முறை விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் மேலும் 4 பேர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா சென்ற கார் ஏறியதில் விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

 

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டுக்குள்ளான அமைச்சரின் மகனை கைது செய்யாத உத்தரப் பிரதேச அரசின் செயல் குறித்து உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Right Menu Icon