--- --:--:-- --

இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை..!

1

ல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரொனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.

 

வருகிற ஒன்றாம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனிடையே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் 8 மாவட்டங்களில் பரிசோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.

 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கி வைத்த இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். வீடுதேடி கல்வித் திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு முடித்த தன்னார்வலர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாலை நேரத்தில் அடிப்படை கல்வியை கற்று தருவார்கள்.

 

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்லூரி பட்டம் முடித்த தன்னார்வலர்கள் பாடங்களை கற்று தருவார்கள். இந்த திட்டத்தில் சேர விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு செய்வதற்காக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

Right Menu Icon