குப்பையில் கிடந்த தங்க நாணயத்தை ஒப்படைத்த தூய்மை பணியாளர்..!
சென்னை திருவொற்றியூரில் குப்பையில் கிடந்த 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மை பணியாளரை போலீசார் பாராட்டியுள்ளனர்.
திருவொற்றியூர் அண்ணாமலை நகரை சேர்ந்த கணேசன் ஷோபனா தம்பதியினர் ஆயுத பூஜை நாளில் வீட்டை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றும் போது தங்க நாணயத்தை தவற விட்டதால் அது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர் தங்க நாணயத்தை கண்டெடுத்த நிலையில் தமது அலுவலர்கள் மூலம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இதன் பின்னர் தங்க நாணயம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர் நல் உள்ளத்தை போலீசார் வெகுவாக பாராட்டினர்.






