--- --:--:-- --

மரணம் அடைந்த பெண் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம்..!

4

மரணம் அடைந்த பெண் 45 நிமிடம் கழித்து உயிருடன் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. மருத்துவ ரீதியாக மரணமடைந்த மூதாட்டி ஒருவர் 45 நிமிடம் கழித்து மீண்டும் உயிருடன் வந்த அதிசயம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் மூதாட்டி வசித்து வருகிறார்.

 

இவருக்கு மகள் உள்ளார். மகள் திருமணமாகி கர்ப்பம் தரித்திருந்த நிலையில் மைதானத்தில் மூதாட்டி விளையாடிக் கொண்டிருந்தபொழுது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட அவரது முதல் மகள் தனக்கு பிரசவவலி வந்து விட்டதாக கூறியுள்ளார்.

 

இதனை தொடர்ந்து உடனடியாக வீடு திரும்பிய அவர் தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது மகளுக்கு பிரசவ வலி வந்த பதட்டத்தில் இருந்த மூதாட்டிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மகளின் பிரசவத்திற்காக காத்துக் கொண்டிருந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் அவர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

மருத்துவர் பரிசோதனை செய்தபோது அவருக்கு இதய துடிப்பு, நாடித் துடிப்பு நின்று விட்டது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் வினியோகம் நின்றுவிட்டது. இது போன்ற செயல்கள் ஒருவரின் உடலில் நடந்தால் அவர் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக கருதப்படுவர்.

 

அதன்பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அவர் உயிர் பிழைப்பது மிகவும் கடினமான ஒன்று. சிபிஆர் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் மகளுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

 

இந்த சூழலில் 45 நிமிடங்களாக ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு நாடித்துடிப்பு இல்லாமல் இருந்த நிலையில் மூதாட்டிக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிர் திரும்பிய அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon