வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து செய்யப்படும்..!
கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழகத்தின் யுஜிசி படிப்புகளில் சேர மாணவர்கள் வரதட்சினை பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் கேரளாவில் வரதட்சிணைக் காரணமாக பல மரணங்கள் நிகழ்ந்தது.
மாநிலத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் திருமணத்தின்போது வரதட்சணை கேட்கவோ அல்லது கொடுக்க மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழியில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பீகார் மாநில அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பல்கலைக் கழகத்தோடு இணைந்து கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்கள் திருமணத்தில் வரதட்சணை கேட்கும்போது கொடுக்க மாட்டோம் என கையெழுத்திட வேண்டும் என பல்கலைக்கழகம் முதல்வருக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரதட்சிணை ஏற்றுக் கொண்டது, கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டால் பட்டம் திரும்ப பெறப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.






