ஹைதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இன்று ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கக்கூடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கக் கூடிய ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோத இருக்கிறது.
இந்த நிலையில்தான் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் நடராஜனுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






