தடுப்பூசியை கட்டாயம் செலுத்தி இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்..!
இனி ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும் எனவும், அதனால் கட்டாயம் அனைவரும் ரேஷன் பொருட்களை வாங்கும்போது தடுப்பூசி போட்டு இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.






