--- --:--:-- --

பெண்ணுக்கு ஒரே சமயத்தில் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம்..!

7

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் பெண் ஒருவருக்கு ஒரே சமயத்தில் இரு முறை தடுப்பூசி போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சுப்பிரமணியன் அவருடைய மனைவி லட்சுமி அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்கு சென்றுள்ளார்.

 

மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு காத்திருந்த லட்சுமிக்கு செவிலியர் ஒருவர் தடுப்பு ஊசி போட்டுள்ளார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக லட்சுமிக்கு தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது.

 

இரண்டாவது முறை செலுத்தும் பொழுது ஏற்கனவே ஊசி போட்டு விட்டதாக கூறியும் அதனை பொருட்படுத்தாமல் செவிலியர் செயல்பட்டதாக பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்டதற்கு ஒரு முறை மட்டுமே ஊசி செலுத்தியதாக செவிலியர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon