--- --:--:-- --

தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக 30 அடிக்கு மேல் கடல் அலைகள் உயர்ந்துள்ளது..!

6

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக 30 அடிக்கு மேல் கடல் அலைகள் எழுந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் அடைந்து காணப்படுகிறது.

 

இதனால் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் துறைமுகத்தில் உள்ள பாலத்தில் கடல் அலைகள் மோதி 30 அடிக்கு மேல் அலைகள் எழுந்து காணப்பட்டன. அப்பொழுது ஆபத்தை உணராமல் தடையை மீறி அந்த சில இளைஞர்கள் குளித்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon