பெட்டிக் கடையில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் புழுக்கள்..!
தஞ்சாவூரில் பெட்டிக் கடையில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் புழுக்கள் மிதப்பது போல வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ராஜராஜன் மணி மண்டபத்திற்கு வந்த கும்பகோணத்தை சேர்ந்த கலை என்பவர் அங்கு உள்ள பெட்டி கடையில் குடிநீர் பாட்டில் வாங்கியதாகவும் அதில் புழுக்கள் மிதப்பது போல இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது ஏஜென்டிடம் தண்ணீர் வாங்குவதோடு சரி அது குறித்து தங்களுக்கு தெரியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை எழுந்துள்ளது.






