பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இதய அறுவை சிகிச்சை – நிதியுதவி வழங்க உத்தரவு..!
பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அமுதமி நகரத்தில் வசிக்கும் வசந்த் அகல்யா தம்பதியின் கைக்குழந்தை இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரி சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையின் உடல் நிலை அறிந்து மிகவும் வருத்தமுற்று தெரிவித்துள்ளார்.
குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






