ரசிகர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை – மியா கலீபா
டாட்டூ ஆர்டிஸ்ட் நாட் ஒன் என்கிற பெயரில் இன்ஸ்டாகிராமில் உலாவரும் அர்ஜூன் என்ற டாட்டு கலைஞர் ஒருவர் அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். 40 லட்சம் பேருக்கு மேல் பார்க்கப்பட்ட இந்த வீடியோவை மியா கலீபா ரசிக்கவில்லை.
அடிப்படையில் அர்ஜுன் ஒரு டாட்டூ கலைஞர். இவர் மியாவின் ரசிகரா அல்லது உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி செய்தாரா என்பது தெரியாது. ஆனால் செய்துவிட்டார்.
ரசிகர் அல்லது காதலிக்காக செய்தால் நமக்கு மிகவும் பிடித்த ஒருவரின் பெயரையோ அல்லது படத்தையோ பச்சை குத்திக் கொள்ள நினைத்தால் எங்கெல்லாம் குத்துவோம்? மார்பில், ஆர்ம்ஸ்களில், கைகளில் குத்திக் கொள்வோம்.
ஆனால் அவருக்கோ அவரது கால் வசதியாக இருந்திருக்கும் போல அங்கே கண்ணாடியுடன் மியா கலீபா படத்தை டாட்டூ குத்தியுள்ளார். அந்த கண்ணாடிதான் மியா கலீபாவின் அடையாளமே.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற குண்டு வெடிப்பின் போது அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக மியா கலீபாவின் கண்ணாடி 73 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.






