--- --:--:-- --

தலிபான் அரசுக்கு அங்கீகாரம் அளித்துள்ள சீனா..!

1

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள அரசை  சீனா அங்கீகரித்துள்ளது. இதுதவிர ஆப்கானிஸ்தானுக்கு உணவுப் பொருட்கள், தடுப்பூசிகள் என உற்பத்தி ஒரு மில்லியன் டாலர் மதிப்புக்கு உதவிகள் வழங்கப்படும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

 

கூட்டத்திற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்தக் கூட்டத்தில் சீனா வின் கருத்து வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் சீனா, பாகிஸ்தான், ஈரான், கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

 

இதன் பின் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்கும் என தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த கூட்டத்திற்கு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நாட்டு அமைச்சர் பங்கேற்கவில்லை. இதற்கிடையே தலிபான்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon