நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் பெயரில் மோசடி..!
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களை குறிவைத்து போலி மின்னஞ்சல் முகவரி, 2டி நிறுவனத்தின் லோகோ ஆகியவற்றை பயன்படுத்தி சிலர் விளம்பரம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பே வாயிலாக ஒவ்வொரு நபரிடமும் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை அந்த மோசடி கும்பல் வசூல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.






