தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு..!
வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களான திண்டுக்கல், தென்காசி, வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




