கொரொனா 3 ஆம் அலையில் நோய் பரவலின் வேகம் இருமடங்காகும்..!
கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்பட வில்லை என்றால் மகாராஷ்டிராவில் அதிவேகத்துடன் மூன்றாம் அலை வீசும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆல்பா பிளஸ் மரபணு மாற்றம் வைரஸ் மூலமாக ஏற்படும் 3 ஆம் அலையில் நோய் பரவலின் வேகம் இப்போது உள்ளதை விட இரு மடங்கு இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தினால் இரண்டாம் நிலையின் தாக்கம் முடிவுக்கு வருவதற்கு முன்னரே மூன்றாம் அலை துவங்கி விடும் எனவும் அப்போது தொற்று பரவும் நபர்களின் எண்ணிக்கை 8 லட்சமாக உயரும் எனவும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தனர்.
கொரொனாவால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் குழந்தைகளாக இருப்பார்கள் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.






