கொரோனா 2-வது அலையை வெல்ல 7 ஆண்டுகள் கல்வியை தியாகம் செய்ய தயார்..!
கொரொனாவுக்கு எதிரான போரில் 7 ஆண்டுகள் வரை தங்கள் கல்வியை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அதன் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா கொடுமைக்கு எதிரான இரண்டாவது போரில் தங்கள் கல்வியை தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும் பள்ளிகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டால் கூட தியாகம் செய்வதாகவும் தங்களுக்கு தெரிந்த மழலை மொழியில் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





