தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் லட்சத்தீவு, கேரள கடலோர பகுதிகளுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






